தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முருகமூர்த்தி கோவிலின் வருடாந்த அலங்காரத் திருவிழாவினை இவ்வருடத்திலிருந்து பதினொரு தினங்கள் நடத்துவதற்கு பொதுமக்களும்-ஆலய பரிபாலன சபையும் முடிவெடுத்து -அதற்கமைய,கடந்த 22.08.2015 சனிக்கிழமை முதல் அலங்காரத்திருவிழா ஆரம்பமாகி தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வந்ததுடன்-31.08.2015 திங்கள் அன்று மேலும் சிறப்பாக 10ம் நாள் திருவிழா நடைபெற்றது.
பத்தாம் நாள் திருவிழாவின் உபயகாரர்களான….
திரு. நல்லநாதசிவம் கேதீஸ்வரன் (மண்கும்பான்-லண்டன்)
திரு பேரம்பலம் பாலசுந்தரம் (மண்கும்பான்-பிரான்ஸ்)
ஆகியோரின் வேண்டுகோளின் பேரில்-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட- 31.08.2015 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற- 10ம் நாள் அலங்காரத் திருவிழாவின்-பகல் மற்றும் இரவுக் காட்சிகளின் நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.
இதன் வீடியோப்பதிவு விரைவில் இணைக்கப்படும்.
நாட்டில் இடம்பெற்ற-யுத்த அனர்த்தங்களின் போது மண்கும்பானிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடந்து-இவ்வாலயம் பராமரிப்பார் இன்றி பாழடைந்து கிடந்ததாகவும்-யுத்த அமைதிக்குப் பின்னர் மீளக்குடியேறிய இப்பகுதி மக்களும்-புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் முருக பக்தர்களும் இணைந்து-ஆலயத்தினை புனரமைத்து-மண்டலாபிஷேகத்துடன் சேர்த்து அலங்காரத் திருவிழாக்களை சிறப்பாக நடத்தி முடித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர் வரும் காலங்களில் மகோற்சவம் நடைபெறும் ஆலயமாக -மண்கும்பான முருகன் மாறுவார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
முக்கிய குறிப்பு…
மண்கும்பான் முருகன் ஆலயத்தில்-அடியார்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான நிரந்தர மண்டபம் இன்மையால் பல சிரமங்களை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாகவும்-எனவே ஆலையத்திற்கு அவசரமாக ஒரு அன்னதான மண்டபம் அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும்-எனவே இத்தகவலை கருத்தில் கொண்டு-உள்நாட்டிலோ அல்லது புலம் பெயர் நாடுகளிலோ வாழும் முருகபக்தர்கள் முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
மேலதிக தொடர்புகளுக்கு…..
ஆலய நிர்வாகத்துடனோஅல்லது திரு.ஈசன் அவர்களுடனோ தொடர்பினை ஏற்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!