தன்னலமற்ற சேவையால் தரணியெங்கும் போற்றப்பட்ட அன்பின் வடிவம் அன்னை தெரேசா-படியுங்கள்!

தன்னலமற்ற சேவையால் தரணியெங்கும் போற்றப்பட்ட அன்பின் வடிவம் அன்னை தெரேசா-படியுங்கள்!

தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப் படும் அன்னை தெரேசா அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும் இந்தியக் குடியுரிமை பெற்ற உரோமன் கத்தோலிக்க அருட் சகோதரியுமாவார்.

உலகில் பெரிதும் அறியப்படாத நாடுகளில் ஒன்றான அல்பேனியா வில் 1910ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் திகதி அன்னை தெரேசா பிறந்தார். இவரின் இயற்பெயர் எக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும்.

இவரது தந்தை அல்பேனிய அரசியலில் ஈடுபட்டிருந்தார்.

1919ம் ஆண்டில் ஸ்கோப்ஜே அல்பேனியாவிலிருந்து பிரிக்கப்பட்ட அரசியல் கூட்டத்திற்குப் பிறகு அவர் நோய்வாய்ப்பட்டு அன்னை தெரேசாவிற்கு எட்டு வயதாயிருக்கும் போது அவரது தந்தை காலமானார்.

எக்னஸ் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந்ததால் தனது துள்ளித் திரிந்த வாழ்க்கை ஒரு மூலைக்குத் தள்ளப்பட்டது.

ஆனாலும் சிறுவயது முதலே தெய்வ பக்தியோடு வாழ ஆரம் பித்தார்.

தனது பதினெட்டாம் வயதில் அவர் வீட்டை விட்டு வெளியேறி, லொரெட்டோ சகோதரிகளின் சபையில் மறை பணியாளராகத் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் தனது தாயையோ அல்லது உடன்பிறந்த சகோதரியையோ மீண்டும் பார்க்கச் செல்லவில்லை.

1950 ஆம்ஆண்டு இந்தியாவின் கொல்கத்தாவில் பிறர் அன்பின் பணி யாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை அவர் நிறுவினார். 1970ம் ஆண்டுக்குள்இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப் பட்டார்.

நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தறுவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.

முதலில் இந்தியா, முழுவதும் பின்னர் வெளிநாடுகளிலும் பிறர் அன்பு பணியாளர் சபையினை நிறுவினார்.

தொழு நோய் மற்றும் காச நொயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்வாழ்வு மையங்கள், ஆதரவற் றோர் இல்லங்கள் மற்றும் பள்ளிக் கூடங்களை அமைத்தார் தெரேசா.

இந்தத் தன்னலமற்ற சேவைக் காக, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1980ம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டதுடன் 1979ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசும் தெரேசாவுக்கு வழங்கப்பட்டது.

1983ல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரை உரோமில் சந்தித்த பொழுது அன்னை தெரேசாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 1989ல் இரண்டாவது முறையாக ஏற்பட்ட மாரடைப்புக்குப் பிறகு அவருக்குச் செயற்கை இதய முடுக்கி பொருத்தப்பட்டது.

1991ல் மெக்சிகோவில், நிமோ னியாவுடனான போராட்டத்திற்குப் பிறகு அவர் மீண்டும் இதயக் கோளா றுகளால் அவதிப்பட்டார். அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசா 1997ஆம்ஆண்டு செப்டெம்பர் 5ஆம் திகதி இறைபதமடைந்தார்.

அவர் இவ்வுலகை விட்டுப் பிரியும் போது அவரின் வழியில் சராசரியாக 5000 அருட் சகோதரிகள் பணியாற்றினர்.

அத்துடன் உலகின் 123 நாடுகளில் அன்பின் துறவற சபை 713 கிளைகளைக் கொண்டிருந்தது.

87 வயதில் இறைவன் தன்னை அழைக்கும் வரையில் தான் அழைக்கப்பட்ட பரம ஊழியத் துக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்து அன்னை ஆற்றிய சேவைகளின் மகத்துவத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை, அவர் மரணித்த செப்டம்பர் 5ஆம் திகதியை சர்வதேச கருணை தினமாகப் பிரகடனப்படுத்தி யுள்ளது.

mother-teresa2

Leave a Reply