தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 19.08.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றதுடன் ஆரம்பமாகி,தொடர்ந்து தினமும் திருவிழாக்கள் சிறப்பாக இடம்பெற்று வந்ததுடன் 28.08.2015 வெள்ளிக்கிழமை அன்று வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மன் தேரேறி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சி இடம் பெற்றதுடன்-மறுநாள் 28.08.2015 சனிக்கிழமை அன்று முத்துமாரி அம்மன் தீர்த்தமாடிய காட்சியும் இடம் பெற்றது.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும்,புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்தும் வருகை தந்த பல்லாயிரக்கணக்கான முத்துமாரி அம்மனின் பக்தர்கள் இக்காட்சியினைக் கண்டு மகிழ்ந்தனர்.
அல்லையூர் இணையத்தின் அனுசரணையில் பதிவு செய்யப்பட்ட-முத்துமாரி அம்மனின் வருடாந்த தீர்த்தத் திருவிழாவின் முழுமையான நிழற்படத் தொகுப்பினை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.