சிலி நாட்டில் சுரங்கத்திற்குள் சிக்குண்டவர்களை மீட்க—-

சிலிநாட்டில் சுரங்கப்பாதையில் மூன்று வாரங்களாக சிக்கியவர்கள் முதன் முறையாக தங்கள் குடும்பத்துடன் நேரடியாக உரையாடினர். சிலி நாட்டில் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 33 பேரும், தங்கள் குடும்பத்துடன் தலா 20 நிமிடங்கள் உரையாடினார்கள். சிக்கியவர்களில் ஒருவர் தான் நன்றாக உள்ளதாகவும், தனக்காக மிகுந்த பொறுமையோடு காத்திருக்கவும் என தனது தந்தையிடம் பேசினார். இவர்களை காப்பாற்ற அரசாங்கம் முயன்று வருகிறது. சிக்கியவர்களை காப்பாற்ற அமெரிக்காவின் நாசா முன் வந்துள்ளது. புது யூகத்தை வகுத்து அவர்களை காப்பாற்ற நாசா விஞ்ஞானிகள் முனைந்துள்ளனர்.

Leave a Reply