யாழ் ஆனைக்கோட்டையில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்-நீதிபதி இளஞ்செழியன் – படியுங்கள்!

யாழ் ஆனைக்கோட்டையில் மனைவியைக் கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்-நீதிபதி இளஞ்செழியன் – படியுங்கள்!

கட்டிய மனைவியை அடித்து துன்புறுத்தி போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்த கணவருக்கு தூக்குத்தண்டனை விதித்து யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

யாழ். மேல் நீதிமன்றில்  (27.08.2015 )வியாழக்கிழமை அன்று குறித்த வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட பின்னரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தூக்குத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு, சித்திரை மாதம் 23 ஆம் திகதி யாழ் ஆனைக்கோட்டை பகுதியில் யோகராசா அமுதவர்த்தினி என்பவர் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபர் மானிப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து வந்த நிலையில், சட்ட வைத்திய அதிகாரி எஸ். சுகுந்தன் யாழ். மேல் நீதிமன்றில், மனைவியை போத்தலினால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் என சாட்சியமளித்துள்ளார்.

இவ்வழக்கின் சாட்சியத்தின் அடிப்படையில், குறிப்பிட்ட கொலைக் குற்றத்திற்கு எதிராக நீதிபதி அவர்கள்-மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். குறித்த தண்டனை ஜனாதிபதி குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில். குறிப்பிட்ட இடத்தில், விதிக்கப்படுமென்று மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Ilancheliyan

Leave a Reply