நல்லைக்கந்தனின் திருவிழா ஆரம்பமாதற்கு முன் பந்தற்கால் நட்ட பின்னர் திருவிழாச்செய்தி ஓலையை செங்குந்தருங்கு தெரிவிப்பதற்காக பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டிலில் ஆலைய பிரதமகுரு எடுத்துச்செல்லும் நிகழ்வின் போது..எடுக்கப்பட்ட பழைய நிழற்படத்துடன் மேலும் 1964 ஆம் ஆண்டுக்கு முன் நல்லூர் கந்தனின் உற்சவகாலத்தில் எடுக்கப்பட்ட ஒரு அரிய புகைப்படமும் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக நாட்டில் ஏற்பட்டிருந்த சூழ் நிலைகளை தமக்குச் சாதகமாக்கி நல்லூர் பிரதேசத்தையே வர்த்தக விளம்பரப் பிரதேசமாக்கி வருகின்றனர் சிலர்-என்று கந்தன் அடியார்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
அல்லையூர் இணையத்தினால்,பதிவு செய்யப்பட்ட-வருடாந்த மகோற்சவத்தின் முதல்நாள் மாலைத் திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.