நாம் பலவற்றை இழந்து விட்டோம். மொழியை மட்டுமே நாம் இழக்காமல் இருக்கிறோம், உலகம் எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்காக உலக தமிழ் பல்கலைக்கழகம் ஒன்று சுவிட்சர்லாந்து போன்ற நாடு ஒன்றில் அமைக்கவேண்டும் என பேராசிரியர் அ.சண்முகதாஸ் தெரிவித்தார்.
தகைசார் தமிழ்ப்பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களது 75ஆவது அகவை நிறைவை முன்னிட்டு சுவிட்சர்லாந்து தமிழ்ச்சங்கமும் தமிழ்கல்விச்சேவையும் இணைந்து நடத்தும் பவளவிழா 22.08.2015 சனிக்கிழமை அன்று சுவிட்சர்லாந்து சூரிச் நகரில் நடைபெற்றது.
பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பேராசிரியர் ப.புஸ்பரத்தினம், தமிழ் கல்விச்சேவையை சேர்ந்த சு.உதயபாரதிலிங்கம், சுவிட்சர்லாந்து தமிழ் சங்க சிரேஷ்ட துணைச்செயலாளர் இரா.துரைரத்தினம், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
பேராசிரியை மனோன்மணி சண்முகதாஸ் அவர்கள் எழுதிய நூல் அறிமுகமும் செய்து வைக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து தமிழ் சங்கத்தின் தலைவர் க.பார்த்தீபன் வரவேற்புரை நிகழ்த்தினார், தமிழ் சங்கத்தின் செயலாளர் மா.ஜெயமோகன் நன்றியுரையாற்றினார்.
கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நன்றி-தினக்கதிர் இணையம்