மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகரின் வருடாந்த கொடியேற்றத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவு!

யாழ் தீவகம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 20.08.2015 வியாழக்கிழமை அன்று அடியவர்களின் அரோகரா கோசத்ததுடன் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டிலும்,வெளிநாடுகளிலிருந்தும், சித்தி விநாயகப்பெருமானின் திருவருளைப் பெற்றுய்யும் முகமாக-பெருந்திரளான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பத்து தினங்கள் நடைபெறவுள்ள திருவிழாவில்-தினமும் விசேட நாதேஸ்வர தவில் கச்சேரியும் -ஆலய அமுதசுரபி அன்னதான மடத்தில் அன்னதானமும்  இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணிவரை சமய சொற்பொழிவும் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சித்திவிநாயகப்பெருமான் மெய்யடியார்களே! 
அனைவரும் ஆச்சார சீலர்களாக தொடர்ந்து பத்து தினங்களும் ஆலயத்திற்கு வருகை தந்து எம்பெருமானின் அபிஷேக, அலங்கார, தீபாராதனை, திருவீதியுலாகளில் கலந்துகொண்டு அவனது திருவருளை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.

இம்முறையும் அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-சித்திவிநாயகப் பெருமானின் திருவருள் துணை கொண்டு-

கொடியேற்றம்

வேட்டை

சப்பறம்

தேர்

தீர்த்தம்

ஆகிய முக்கிய திருவிழாக்கள் அனைத்தும் வீடியோப் பதிவுகளாக,உங்கள் பார்வைக்கு எடுத்துவரப்படவுள்ளது-என்பதனை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

.

கொடியேற்றத் திருவிழாவுக்கான அனுசரணையினை வழங்கியவர்கள்….

sv-telecome-copy-703x1024 (1)

DSC03540

Leave a Reply