அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் கோவில் பரிவாரமூர்த்திகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு-20.08.2015 வியாழக்கிழமை அன்று மாலை-ஆலய தர்மகர்த்தா பெரியவர் செல்லத்துரை நடேசபிள்ளை அவர்களின் தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றதாக தெரிய வருகின்றது.
அல்லைப்பிட்டி இனிச்சபுளியடி முருகன் ஆலயம்-மிகப்பிரமாண்டமாக புனரமைக்கப்பட்டு வருவதுடன்-மிக விரைவில் பொதுமக்களின் பங்களிப்புடன்-மகோற்சவம் நடத்துவதற்கான முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக-ஆலயத்தோடு சம்மந்தப்பட்ட பக்தர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
தீவகத்தில் அமைந்துள்ள ஏனைய கிராமங்களில் மகோற்சவங்கள் சிறப்பாக நடைபெற்று வருவதோடு-தேரோடும் காட்சிகளை கண்டு பக்தர்கள் ஆனந்தமடைகின்ற போதிலும்-எமது கிராமத்தில் அமைந்துள்ள ஆலயங்களில் அலங்காரத் திருவிழாக்கள் மட்டுமே காலங்காலமாக நடைபெற்று வருவதாக அவர் தனது கவலையினை வெளியிட்டார்.