ஆடி அமாவாசை தினமான 14.08.2015 வெள்ளிக்கிழமை அன்று உலகமெல்லாம் பரந்து வாழும் இந்து மக்கள்-கடலில் நீராடி தர்ப்பணம் செய்து தமது இறந்த முன்னோர்களுக்கான பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.
டென்மார்க் சைவத்தமிழ் பண்பாட்டுப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட பிதிர்க்கடன் நிறைவேற்றும் நிகழ்வு-டென்மார்க்கின் Vejle Tirsbæk கடலருகே இடம் பெற்றது.
இதேபோல் தீவகத்தில் வேலணை சாட்டி வெள்ளைக் கடற்கரையிலும்,யாழ் கீரிமலையிலும் பெருமளவான மக்கள் இறந்த தமது முன்னோர்களுக்கு பிதிர்க்கடன்களை நிறைவேற்றினர்.