வரலாற்றுப் புகழ் மிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 13.08.2015 வியாழக்கிழமை அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது.
காலையில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து பகல் 11.00 மணியளவில் மாவைக்கந்தன் வள்ளி தெய்வயானையுடன் அலங்காரத் திருத்தேர் மீதேறி வெளி வீதியுலா வந்த கண்கொள்ளாக் காட்சியும் இடம் பெற்றது.
இம்முறை திருவிழா தேர்தல் காலத்தில் இடம்பெற்றமையால் அரசியல்வாதிகளான, மாவிட்டபுரத்தை சொந்த இடமாகக் கொண்ட மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்துகொண்டதுடன் மேலும் வட மாகாண ஆளுநர் பாளையக்கார மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் வட மாகாண துணைத்தூதுவர் ஆ. நடராசா ஆகியோரும் கலந்துகொண்டதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தெரிவிக்கின்றன.
நிழற்படங்கள்-முகநூல் நண்பர்-எஸ்.நிருஜன்