யாழ் தீவகம் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர் திருமதி சின்னத்தம்பி நல்லம்மா அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 08.08.2015 சனிக்கிழமை அன்று நினைவு கூரப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு-அன்னாரின் புதல்வர்களின் நிதி அனுசரணையில்,அல்லையூர் இணையத்தின் ஏற்பாட்டில்-08.08.2015 சனிக்கிழமை அன்று பகல் கரவெட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்லத்தில் பிரார்த்தனையுடன் கூடிய மதிய சிறப்புணவு வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய-அல்லைப்பிட்டி கறண்டப்பாய் முருகனை வேண்டி நிற்கின்றோம்.