யாழ் தீவகத்தில் திறமைமிக்க இருமாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

யாழ் தீவகத்தில் திறமைமிக்க இருமாணவர்களுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்திய அல்லையூர் இணையம்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

image (2)

யாழ் தீவகத்தில் மிகவும் பின் தங்கிய கிராமமான எழுவைதீவில் அமைந்துள்ள முருகவேள் மகாவித்தியாலய மாணவர்கள் இருவருக்கு 30 ஆயிரம் ரூபாக்கள் பெறுமதியில் இரண்டு துவிச்சக்கர வண்டிகள்  ஊக்குவிப்புப் பரிசாக வழங்கப்பட்டன.

பரிசு பெற்ற மாணவர்கள் இருவரும்-வறுமையிலும் திறமையுடன்-கல்வி கற்று வருவதுடன் கடந்த2012 ஆம் ஆண்டு நடைபெற்ற-புலமை பரிசு பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் ஆவார்கள்.இவர்களின் திறமையினைக் கருத்தில் கொண்டு-மேலும் ஊக்கப்படுத்தும் முகமாக -இப்பாடசாலையில் கல்விபயிற்றுவிக்கும் ஆசிரியர் திரு அகிலன் நற்குணம் அவர்கள்-அல்லையூர் இணையத்திடம் விடுத்த வேண்டுகோளினை ஏற்று-அல்லையூர் இணையத்தின் இயக்குநர் திரு சிவா செல்லையா அவர்களினால் 30 ஆயிரம் ரூபாக்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாடசாலையின் நடைபெற்ற-வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டியின் போதே இப்பரிசுகள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆபிரிகாம் லிங்கனும்,அப்துல் கலாமும் வறுமையிலும் திறமையாக கல்வி பயின்ற பிரபலமான மேதைகள் தான்….எனவே திறமைமிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.

image (3) image (4) image (7) image (6) image (8) image (13) image (11) image (12) image (9)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux