யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் வருடாந்த,மகோற்சவம் வரும் 20.08.2015 வியாழக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது என்பதனை-சித்தி விநாயகப் பெருமானின் பக்த கோடிகளுக்கு அறியத்தருகின்றோம். மேலும் திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் முக்கிய திருவிழாக்கள் அனைத்தும்-வழமைபோல எமது இணையத்தின் ஊடாக -உலகமெல்லாம்பரந்து வாழும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் பக்தர்களின் பார்வைக்கு எடுத்து வரப்படவுள்ளது என்பதனையும் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.
