சட்டவிரோத கருக்கலைப்பு நிலையம் பொலிஸாரால் முற்றுகை _

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் நீண்ட நாட்களக இயங்கி வந்ததாக கூறப்படும் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையமொன்றை பொலிசார் இன்று முற்றுகையிட்டுள்ளனர். 

வாகரைப் பொலிசார் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்தினை முற்றுகையிட்டு அங்கிருந்த சட்டவிரோத கருக்கலைப்புக்கு பயன்படுத்திய உபகரணங்கள் மற்றும் சில மருந்துப்பொருட்கள் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். 

வாகரை கிருமிச்சைப்பகுதியில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட கர்ப்பினியான யுவதியொருவர் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இவரை பின் தொடர்ந்த வாகரை பொலிசார் இச்சட்டவிரோத கருக்கலைப்பு நியைத்தினை முற்றுகையிட்டதாகவும் அங்கிருந்த பெண் வைத்தியரொருவரையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதுடன் மற்றுமொரு பெண்ணையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்;ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம்.கருணாரட்னவின் பணிப்பின் பேரில் வாகரை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனா.;

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux