யாழ் தீவகம் புளியங்கூடல் சின்னமடு மாதா ஆலய நவநாள் திருவிழா கடந்த 27.07.2015 திங்கட்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
இந்நவநாள் திருவிழாவில் விசேட பூஜை வழிபாடுகள் தினமும் இடம்பெற்று வருவதுடன் எதிர்வரும் 4ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணிக்கு செபமாலையுடன் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நற்கருணை ஆராதனையும் மறுநாள் 5ஆம் திகதி புதன்கிழமை காலை 7 மணிக்கு யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்திரநாயகம் ஆண்டகையின் தலைமையில் திருவிழா திருப்பலி இடம்பெற்று திருச்சொரூப பவனியும் நடைபெறவுள்ளது.