யாழ் தீவகம் நயினாதீவில் நீண்ட காலமாக(சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக) புனரமைக்கப்படாமல் கிடந்த கடற்கரை செல்லும் வீதியானது-தற்போது வேலணை பிரதேச சபையின் நயினாதீவு உப அலுவலகத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நயினாதீவு வங்களாவடி தொடக்கம் இஸ்லாமிய விளையாட்டுக் கழக மைதானம் வரை-தற்போது புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக எமது நயினாதீவுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
நிழற்படங்கள்-தகவல்கள்
நயினாதீவிலிருந்து-s. Antony Dansan