யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகருக்கு மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வரும் ஏழுதள இராஜகோபுரத்தின்- கருங்கல்லிலான முதலாவது தளத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிகக்கடினமான,கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினால் அமைக்கப்பட்ட முதலாவது தளத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து-மேற்கொண்டு இரண்டாவது தளத்தின் பணிகள் விரைவுபடுத்தப்படவுள்ளதாக மேலும் தெரியவருகின்றது.
யாழ் மாவட்டத்தில்- இப்படியானதொரு கலைவேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல்லினான ஏழுதள இராஜகோபுரம் இதுவரைக்கும் அமைக்கப்படவில்லை என்று-இதன் கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்தக்காரரும்,சிப்பாச்சாரியாருமாகிய,திரு.காந்தரூபன் அவர்கள் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீ வீரகத்தி விநாயகரின் சந்நிதானத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும்-அடியவர்களுக்கு வயிறாற அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக ஆலய பரிபாலன சபை அறிவித்துள்ளது.அடுத்து வரும் இரண்டு வருடங்களுக்கு அன்னதானம் வழங்குவதற்கான முற்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினை மேற்கோள்காட்டி செய்தியொன்று தெரிவிக்கின்றது.