யாழ் தீவகம் மண்டைதீவில் அமைந்துள்ள புனித பேதுருவானவர் ஆலய வருடாந்தத் திருவிழா 23.07.2015 வியாழக்கிழமை அன்று மாலை பங்குத் தந்தை எம்.பத்திநாதர் அவர்களின் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளதாக தெரியவருகின்றது.
தினமும் நவநாள் ஆயத்த வழிபாடுகள் மாலை 5.30 மணிக்கு இடம்பெற்று வருவதுடன்-வரும் 31.07.2015 அன்று மாலை 5.45 மணிக்கு புனிதரின் திருச்சுருபப்பவனி இடம்பெறும் எனவும்- மறுநாள் காலை 7.00 மணிக்கு பெருநாளின் விஷேட திருப்பலி இடம்பெறவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.