லண்டனிலிருந்து இயங்கும் “நயினாதீவு மணிமேகலை முன்னேற்றக் கழகம்” என்னும் அமைப்பினால்-நயினாதீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக- 2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பின்னர் செயலிழந்த -மணிமேகலை கல்வி நிலையத்தின் செயற்பாடுகள் மீண்டும் புதுப்பொலிவுடன் -24.07.2015 வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ் தீவகத்தில் ஆன்மீகத்திலும், கல்வியிலும் சிறந்து விளங்கும் கிராமமாக நயினாதீவே முன்னணி வகிப்பதாக மேலும் தெரிய வருகின்றது.
நயினாதீவை,பின்பற்றி மற்றைய கிராமங்களில் வசிக்கும் ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு-புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு கிராம மக்களும் உதவிட முன்வர வேண்டும் என்பதே எமது இணையத்தின் வேண்டுகோளாகும்.
நிழற்படங்கள்-தகவல்கள்….
திரு நயினை எம்.குமரன்…