யாழ்.ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 28ஆவது ஆண்டு நிறைவு விழாவினையொட்டி- மாற்று வலுவுள்ளோருக்கான விளையாட்டுப் போட்டிகள் 18.07.2015 சனிக்கிழமை அன்று யாழ்.சென் ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஜெய்ப்பூர் நிறுவனத் தலைவர் டாக்டர் திருமதி ஜெ.கணேசமூர்த்தி தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
ஜெய்ப்பூர் நிறுவனம் நடாத்திய-வலுவிழந்தோருக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வில் பிரதம விருந்தினராக ஊவா மாகாண சபையின் விவசாய அமைச்சர் செனரத் அத்தநாயக்க ( இவர் ஒரு மாற்றுத் திறனாளி) கலந்து கொண்டு சிறப்பித்தார்.
வலுவிழந்தோருக்கான சைக்கிள் ஓட்டப்போட்டி, முச்சக்கர வண்டி ஓட்டம் – என்பன வீதி நிகழ்வாகவும், மென்பந்து துடுப்பாட்டம்,சக்கர நாற் காலி ஓட்டம் , மேசைப்பந்தாட்டம், பூப்பந்தாட்டம், கயிறு இழுத்தல் என்பன உள்ளக விளைளயாட்டுக்களாகவும் இடம்பெற்றன.
யாழ் மாவட்ட-மாற்றுவலுவிழந்தோர் சங்கத்தின் தலைவராகவும்-அல்லையூர் இணையத்தின் அறப்பணிச் செயற்பாட்டாளராகவும்-பணியாற்றும் திரு வி.குருபவராசா அவர்களும் இப்போட்டிகளில் கலந்து கொண்டிருந்தார்-என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.