தமிழ் மக்களின் தலைவிதி!

தமிழ் மக்களின் தலைவிதி!

பாராளுமன்ற ஆசனங்களைக் குறி வைத்து தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் வடக்கு, கிழக்கில் களத் தில் இறங்கியிருக்கின்றன. முன்னைய தேர்தல்களைப் போலன்றி இம்முறை வாக்குவேட்டை மிகத் தீவிரமாக உள்ளதை அவதானிக்க முடிகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளெனக் கொள்ளக் கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம்களின் தனிப் பெரும் சக்தியாக விளங்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ¤ம் இம்முறை சவாலை எதிர்கொண்டுள்ளதனாலேயே அங்கு தேர்தல் களம் தற்போது விறுவிறுப்பு நிறைந்ததாக உள்ளது.

தமிழ், முஸ்லிம் மக்களின் இவ்விரு பிரதான அரசியல் சக்தி களினதும் மாற்று அணிகளினதும் இலக்குகளுக்கிடையே வேறுபாடு உண்டு. இம்முறை தேர்தலில் கூடுதல் ஆசனங்க ளைக் கைப்பற்ற வேண்டும்; அம்முயற்சி சாத்தியமாகாத பட்சத் தில் தற்போது கைவசமுள்ள எண்ணிக்கையையேனும் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். இதுவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் எண்ணமாக உள்ளது.

இக்கட்சிகளுக்குச் சவாலாகக் களமிறங்கியுள்ள மாற்று அணிகளின் குறிக்கோளை வேறு கோணத்திலேயே நோக்க வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒவ்வொரு ஆசனத்தையாவது கைப்பற்றிக் கொள்வதன் மூலம் ‘ஏக பிரதிநிதிகள்’ என்ற நீண்ட கால மாயையைத் தகர்த்து விட வேண்டுமென்பது மாற்று அணிகளின் பிரயத்தனமாக உள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பையும் முஸ்லிம் காங்கிரஸையும் பொறுத்த வரை வடக்கு, கிழக்கில் இம்முறை சிக்கலானதொரு சூழ்நிலை தோன்றியுள்ளதென்பது உண்மை. வாக்குகள் சிதறுண்டு போவதால் தாங்கள் இதுவரை கைப்பற்றி வைத்திருந்த ஆசனங்களை இம்முறை தேர்தலில் தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய் விடுமோவென அக்கட்சிகள் கொண்டுள்ள அச்சத்தில் நியாயம் உண்டு.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழமையைப் போல நான்கு தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கியதாக தேர்தலில் களமிறங்கியுள்ளது. தமிழரசுக் கட்சி, புளொட், ஈ. பி. ஆர். எல். எப்., ரெலோ ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வியூகம் இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரை சிக்கல்கள் நிறைந்த தேர்தல் கூட்டு இம்முறையும் கிடையாது. வடக்கு, கிழ க்கில் போட்டியிடுகின்ற ஏனைய தமிழ்க் கட்சிகள் அனைத் துமே தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரை மாற்று அணிகள்தான்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் கட்சிகளின் தேர்தல் களம் சற்று சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ரவூப் ஹக்கீம் தலை மையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் வடக்கு, கிழக்கின் சில மாவட்டங்களில் தனித்தும் சில மாவட்டங்களில் ஐ. தே. கவுடன் கூட்டுச் சேர்ந்தும் போட்டியிடுவதாலேயே முஸ்லிம் தேர்தல் களம் விறுவிறுப்பாக மாறியிருக்கிறது.

எவ்வாறெனினும் வடக்கு, கிழக்கு தேர்தல் களத்தைப் பொறுத்த வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய பிரதான அணிகளின் இலட்சியம் ஒன்றாகவே உள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தரப்பினர் மீண்டும் அதிகாரத்துக்கு வரக்கூடிய எத்தகையதொரு சாத்தியத்தையும் முறியடிப்பதன் மூலம் சர்வாதிகாரம் மற்றொரு தடவை தலைதூக்குவதைத் தடுத்து நிறுத்துவதே இக்கட்சிகளின் நோக்கமாகும். ரணில் தலைமையிலான அணியைப் பலப்படுத்தும் விதத்திலேயே இக்கட்சிகள் மக்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றன.

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் ஜனாதிபதி மைத்திரி மீதான தனது நல்லெண்ணத்தை கிழக்குத் தேர்தல் பிரசாரங்க ளில் வெளிப்படுத்தி வருகிறார். தமிழ்க் கூட்டமைப்பு கூடுதல் ஆசனங்களை வென்றெடுக்குமானால், இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பக்கபலமாக அமையுமெனக் குறிப்பிட்டுள்ளார் சம்பந் தன். தமிழர்களுக்குத் தீர்வு வழங்குவதில் ஜனாதிபதி மைத்திரி கொண்டுள்ள இதயசுத்தி நிறைந்த உறுதிப்பாட்டையும் சம்பந்தன் குறிப்பிடத் தவறவில்லை.

இத்தகைய சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதி ரான அணிகளெனக் கருதப்படுவோரின் கடந்த கால வரலாறு, தனிப்பட்ட குணாம்சங்கள் போன்றவை குறித்தெல்லாம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நிதானமாக ஆராய வேண்டிய கட்டத்தில் இன்று உள்ளனர்.

அவர்களில் சிலர் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அரசியலுக்குள் சடுதியாக வீழ்ந்தவர்களென்பது வேறு விடயம். தமிழ் இனத்தின் விடுதலைக்கு ஆயுதப் போராட் டத்தைத் தவிர வேறு வழியில்லையென அவர்கள் அன்று சூளுரைத்ததன் விளைவாகவே தமிழ்ச் சமூகம் எண்ணிலடங் காத உறவுகளையும் உடைமைகளையும் பறிகொடுத்து இன்று நிர்க்கதியாகி நிற்கிறது.

ஆயுதப் போராட்டத்துக்கு மாற்aடாக ஜனநாயகப் பாதையை மக்களுக்குக் காண்பித்த தமிழ்த் தலைவர்களும் புத்திஜீவிகளும் கூட இன்று நம் மத்தியில் இல்லை. சந்தர்ப்பம் வாய்ப்பாக அமையும் போது கொள்கை களை மாற்றிக்கொண்டு பதவிகளை அலங்கரித்த அவர்கள், இப்போது தேர்தல் மேடையில் மீண்டும் தமிழ் மக்களுக்கு அரசியல் புகட்ட வந்திருக்கிறார்கள்.

தமிழ் சமூகத்தின் இரண்டு தலைமுறைகள் சீரழிந்த பின்னர் இப்போது புதிய கொள்கையைக் கூறுகிறார்கள். தங்களது கடந்த காலப் பாதையை தமிழ் மக்கள் அறியாதவர்களென்ற நினைப் பில் ஜனநாயகத்தையும் உரிமையையும் பற்றிப் பேசுகிறார்கள். இதேவித சாத்விக பாதைக்கு அன்று இவர்கள் வழிவிட்டிரு ந்தால் இலட்சக்கணக்கான உயிர்களை தமிழ் சமூகம் பறிகொடுத்திருக்கத் தேவையில்லை.

பதவிக்கும் பொருளுக்கும் ஆசைப்பட்டு சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வாறு தாங்கள் கூறுகின்ற உபதேசங்களுக்கெல்லாம் முட்டாள் களைப் போல தமிழ் மக்கள் இன்னும் தான் செவிசாய்க்க வேண்டுமென இவர்கள் நம்புவது வேடிக்கையாகவே உள்ளது.

நன்றி-தினகரன் இணையம்

the-3

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux