அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற-அன்னதான நிகழ்வு-படங்கள் விபரங்கள் இணைப்பு!

2a

அல்லைப்பிட்டியில் கடந்த 16.07.2015  வியாழக்கிழமை அன்று நடைபெற்ற- புனித கார்மேல் அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவின் போது-அமரர்கள் திரு,திருமதி இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி தம்பதியினரின் ஞாபகார்த்தமாக-பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

அமரர்கள்  இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி  தம்பதியினரால் -புனித அன்னையின் வருடாந்த,பெருநாள் விழாவிற்கு-ஆண்டுதோறும்  அன்னதானம் வழங்குவது வழமையான ஒன்றாகவே முன்னர் இருந்து வந்தது.

அன்னார்களின் மறைவுக்குப் பின்னரும்-யுத்த அனர்த்தங்களுக்கிடையிலும்-அப்பணியினை,அமரர்கள் இரத்தினசபாபதிசிவயோகலட்சுமி  தம்பதியினரின் உறவினர்களான  திரு,திருமதி நடேசபிள்ளை மங்கையற்கரசி தம்பதியினர் தொய்வின்றி முன்னெடுத்து வந்தனர்.

பெரியவர் நடேசபிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டுள்ள அதிகவேலைப்பளு மற்றும் மூப்பின் காரணமாக-அவரைச்சிரமப்படுத்தாது-அமரர்கள் இரத்தினசபாபதி-சிவயோகலட்சுமி  தம்பதியினரின் பிள்ளைகளின் ஒன்றுபட்ட நிதியுதவியுடனும்-வேண்டுகோளுடனும்-கடந்த மூன்று வருடங்களாக-அல்லையூர் இணையம் பொறுப்பெடுத்து-பண்டிதர் கலாநிதி செல்லையா திருநாவுக்கரசு அவர்களின் நேரடி மேற்பார்வையில் அன்னதான நிகழ்வினை சிறப்பாக நடத்தி வருகின்றோம்.

இவ்வருடமும் கடந்த வருடத்தைப் போல -ஆயிரம் உணவுப் பொட்டலங்கள்-புனித அன்னையின் பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.

அல்லைப்பிட்டி என்ற இச்சிறிய கிராமத்தில்-அமைந்துள்ள புனித கார்மேல் அன்னையின் ஆலயத்தில் மட்டுமே-அனைத்து மக்களும் வருடாந்த பெருநாளுக்கு ஒன்று கூடுவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

11737173_517819238380852_127678691_n IMG_0149 copy IMG_0150 copy IMG_0187 copy IMG_0189 copy IMG_0192 copy IMG_0194 copy IMG_0196 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux