யாழ் தீவகம் அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் திருவிழா-16-07-2015 வியாழக்கிழமைஅன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இம்முறை யாழ் மாவட்ட குருமுதல்வர் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் கூட்டுத்திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதாகவும்- பல நூற்றுக்கணக்கான புனித கார்மேல் அன்னையின் பக்தர்கள் இத்திருப்பலி வழிபாடுகளில் கலந்து கொண்டதாகவும்- எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
புனித கார்மேல் அன்னை ஆலயத்தின்-புனரமைப்புப் பணிகளை கடந்த 1999 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை முன்னின்று மேற்கொண்டு வருவதுடன்- ஆலயத்தினை பாதுகாத்து வருபவருமாகிய, பெரியவர் திரு அல்பிரட் ஜோர்ச் அவர்களுக்கு-அல்லைப்பிட்டி பங்கு மக்கள் சார்பில் பொன்னாடை அணிவித்து-வாழ்த்துப்பா பாடி கௌரவித்த நிகழ்வு சிறப்பு நிகழ்வாக இடம் பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழமை போல அல்லையூர் இணையத்தினால், புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழா இம்முறையும் முழுமையாக வீடியோப்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் முழுமையான நிழற்படப்பதிவினையும் மேற்கொண்டுள்ளோம்.
கீழே வீடியோ மற்றும் நிழற்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
அனுசரணை
அல்லையூர் இணையத்தின் ஊடாக -அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாள் விழாவினை -பதிவு செய்து வெளியிடுவதற்கு வேண்டிய நிதி அனுசரணையினை,அல்லைப்பிட்டி மக்களின் அன்புக்குரியவராகவும்-சமூக ஆர்வலராகவும்-அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னை ஆலயத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு நீண்டகாலம் ஆலயப் பணியாற்றியவருமாகிய-அமரர் நீக்கிலாப்பிள்ளை சவரிமுத்து(சிங்கராசா) அவர்களின் புதல்வர் திரு அன்ரன் அவர்களே வழங்கியுள்ளார்.அவருக்கும்-அவரது குடும்பத்தினர்களுக்கும்-புனித கார்மேல் அன்னையின் அருளும்,ஆசியும் கிடைக்க வேண்டுகின்றோம்