காலத்தால் என்றுமே மறக்க முடியாத எம்.எஸ்.வியின் இறுதியாத்திரையின் வீடியோ கட்டுரை இணைப்பு-படித்துப் பாருங்களேன்!

காலத்தால் என்றுமே மறக்க முடியாத எம்.எஸ்.வியின் இறுதியாத்திரையின் வீடியோ கட்டுரை இணைப்பு-படித்துப் பாருங்களேன்!

கண்ணதாசன் பாடல் எழுத, விஸ்வநாதன் இசையமைக்க, செளந்தரராஜன் பாடல் பாட… இனிமேல் என்று வரும் அந்தக் காலம்!

பல வருடங்களுக்கு முன்னர் பேட்டியொன்றின் போது பாடகர் ரி. எம். எஸ். துயரத்துடன் கூறிய வார்த்தைகள் இவை.

தமிழ் சினிமாப் பாடல்களை தம்வசம் ஆக்கிரமித்து வைத்திருந்த அந்த மும்மூர்த்திகளில் இறுதியாக எஞ்சியிருந்த மெல்லிசை மன்னர் விஸ்வநாதனையும் கலையுலகம்  இழந்து நிற்கிறது.

சாஸ்திரிய சங்கீதத்துக்குள் கட்டுண்டு கிடந்த தமிழ் சினிமா இசையை சாமான்ய ரசிகர்களின் காலடிக்குக் கொண்டு வந்தவர் விஸ்வநாதன். இசைஞானம் மிகுந்தவர்கள் மாத்திரமே சங்கீதப் பாடல்களை ரசிக்கும் தகுதியுடையவர்கள் என்றொரு காலம் அப்போது இருந்தது. அதற்கு ஏற்றாற் போல கர்நாடக இசையின் வாடை அதிகம் நிறைந்ததாகவே அன்றைய சினிமாப் பாடல்கள் விளங்கின.

அப்பாடல்கள் சாதாரண மக்களின் நாவில் வருவதற்கு மறுத்தன. தமிழ் சினிமா இசைக்குள், 1952 ஆம் ஆண்டு எம். எஸ். வியின் பிரவேசத்தின் பின்னரே தமிழ் பேசும் ரசிகர்களின் காதுகளுக்கு சினிமாப் பாடல்கள் இனிமை தந்தன. வியர்வை சிந்தி உழைக்கும் பாமர மகன் தொடக்கம் மேட்டுக்குடி வர்க்கம் வரை அனைவருமே சினிமாப் பாடல்களை முணுமுணுக்கத் தொடங் கினர்.

தமிழ் சினிமாவில் 1952 ஆம் ஆண்டு ‘பயணம்’ என்ற படத்தின் மூலம் விஸ்வநாதன் தொடங்கிய இசைப் பயணம் அறுபது வருட காலமாகத் தொடர்ந்தது. முதுமை தந்த தளர்வும் வியாதிகளும் இல்லாதிருப்பின் மெல்லிசை மன்னர் தொடர்ந்தும் காதுகளுக்கு இனிமையைத் தந்து கொண்டே இருந்திருப்பார். காலம் அதற்கு இடம் தரவில்லை.

தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் என்றெல்லாம் 1200 இற்கு மேற்பட்ட படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். எண்ணிக்கை அடிப்படையில் நோக்கி இதனை சாதனையென்று கூறுவதைப் பார்க்கிலும், அவரது அத்தனை பாடல்களும் ரசிகர்களின் உள்ளத்தை ஆயுள் வரை தாலாட்டிச் செல்வதுதான் இமாலயச் சாதனை.

விஸ்வநாதனுக்கு பின்னர் தமிழ் சினிமாவின் இசைத் துறையில் எண் ணிலடங்காத இசையமைப்பாளர்கள் புதிதாக காலடி பதித்துள்ளனர். அவர்களது பாடல்கள் ஒரு மாத காலம் கூட ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நின்றதில்லை. ஆனால் எம். எஸ். வியின் பாடல்களை அரைநூற்றாண்டு கடந்த பின்னரும் இளம் தலை முறையினர் கூட இன்னும் தான் புத்தம் புதிதாக மனதில் பத்திரப் படுத்தி வைத்துள்ளனர்.

எந்தவொரு இசை அரங்கிலும் இன்றும் அப்பாடல்கள் ஒலிக்காமல் விடுவதில்லை. காதுகளுக்கு இனிமை தடவிச் செல்கின்றன. அப்பாடல்களை தினமும் ஒரு தரமேனும் மனதினுள் அசைபோடாமல் நாம் இருந்ததில்லை. கோடிக்கணக் கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருந்த மெல் லிசை மன்னர் விடைபெற்றுச் சென்றுவிட்டாரென்ற செய்தி பெரும் துயரையும் நிரப்ப முடியாத இடைவெளியொன்றையும் ஏற்படுத்தி யிருக்கிறது. அவர் இசைவடிவம் கொடுத்த பாடல்கள் எம்மிட மிருந்து எக்காலமும் விடைபெற்றுச் சென்றுவிடப் போவதில்லை.

11695976_1016685061677485_4004869971842246019_n

Leave a Reply