தீவகம் மண்கும்பான் மேற்கைப் பிறப்பிடமாகவும்-பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட-அமரர் திருமதி உமாபதிசிவம் ஜெயலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு தினம் 13.07.2015 திங்கட்கிழமை அன்று அனுஸ்டிக்கப்படுகின்றது.
அன்னாரின் நினைவு தினத்தினை முன்னிட்டு அன்றைய தினம்-அன்னாரின் கணவர் திரு உமாபதிசிவம் அவர்களின் நிதி அனுசரணையில்-அல்லையூர் இணையத்தின் அறப்பணியாளர்களின் உதவியுடன்-முதற்தடவையாக,யாழ் கைதடி அரச முதியோர் இல்லத்தில் மதிய சிறப்புணவு வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய,அன்னாரது குடும்பத்தினருடன் இணைந்து -நாமும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!! ஓம் சாந்தி!!!