அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித அந்தோனியாரின் வருடாந்த பெருநாள் விழா-கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி,கடந்த வாரம் பெருநாள் விழாவுடன் நிறைவடைந்தது.
அல்லைப்பிட்டி பங்கில் இருந்து வந்த அந்தோனியார் ஆலயம் தற்போது பிரிக்கப்பட்டு-யாழ் குருநகர் பங்குடன் இணைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக பெருநாளின் போது நிழற்படப் பதிவினை மேற்கொள்ள சில காரணங்கள் தடையாக இருந்தனால்-எம்மால் பெருநாள் விழாவினை முழுமையாக பதிவு செய்ய முடியவில்லை-இருந்த போதும் எமக்குக் கிடைத்த சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.