ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் வருடாந்த மஹோற்சவம் 17.06.2015 புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று -30.06.2015 அன்று தேர்த்திருவிழாவும்-01.07.2015 புதன்கிழமை அன்று தீர்த்தத் திருவிழாவும்-பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடந்தேறியது.
தீவகத்தில் கோவில் கொண்டு அருள்பாலித்து பக்தர்களைக் காத்தருளும்-நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் புகழ் பரப்பும் நோக்கோடு-அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட-தீர்த்தத் திருவிழாவின் முழுமையான வீடியோப் பதிவினை கீழே இணைத்துள்ளோம்.
அன்னையின் தீர்த்தத் திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்கள்….
பரிஸில் புகழ் பெற்ற-
RANI PARTY SERVICE மற்றும் RANI Restaurant ஆகியவற்றின் உரிமையாளர்-நயினாதீவைச் சேர்ந்த,திரு R.கிஸ்ணா அவர்கள் -அன்னையின் தீர்த்தத் திருவிழாவுக்கான அனுசரணையினை வழங்கியுள்ளார்-அவருக்கும்-அவரது குடும்பத்தினருக்கும்-நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் அருள் கிடைக்க வேண்டுகின்றோம்.