ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா 30.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது.
அதற்கு முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு விசேட பூசைகள் ஆரம்பமாகி காலை 7மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று காலை 8மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் அர்ச்சனைகள் நிறைவடைந்ததும் தேருலாவில் வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தாள். தேர் உற்சவத்தில் கலந்து கொள்ளும் பொருட்டு குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திங்கட்கிழமை மாலை முதல் ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர்.
நாகபூஷணி அம்மனின் அருளாசி பெற்று-அல்லையூர் இணையத்தினால்-முழுமையாகப் பதிவு செய்யப்பட்ட,தேர்த்திருவிழாவின் வீடியோப் பதிவினை கீழே உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளோம்.
இத்தேர்த்திருவிழாவிற்கான அனுசரணையினை வழங்கியவர்கள்…
பரிஸில் புகழ் பெற்ற-நம்மவரின் நாணய மாற்று நிறுவனத்தினர்-
அவர்களுக்கு நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் அருள் என்றும் கிடைக்க வேண்டுகின்றோம்.
ஏழாறுபிரியும் கடலோரம்
எழில் கொஞ்சி விளையாடும் கரையோரம்
இராஜகோபுரப்பதி கொண்ட நாயகியாள் உற்சவமாம்
கருநாகம் மீதிலமர்ந்து
கருணைக்கடலென வீற்றிருந்து
அருளும் அமுதும் மன நிறைவும் தரும்
எங்கள் நயினை நாகபூஷணிக்கு உற்சவமாம்
தேவரும் மூவரும் வாழ்த்த
விண்ணும் மண்ணும் போற்ற
கடலோடு காற்றெழுந்து மகிழ
எங்கள் நயினையின் நாயகியாளின்
உற்சவமாம்
அலையென அடியார் திரள
அனலையின் நாகமும் பூச்சூடி வாழ்த்த
ஆனந்தம் கொண்டே
அருள்மழை பொழியும் நாயகியாள் உற்சவமாம்….!!!!
“அம்மையே போற்றி அகிலமே போற்றி அகிலாண்டேஸ்வரியே போற்றி.”
அன்புடன்…
அன்னைமகன்.