இதுவும் இப்போது முக்கியம்

நடிகர் ரஜனிகாந்தின் மகளுக்கு இன்று திருமணம்

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் ராம்குமார்- ஹேமாராம் குமார் தம்பதிகளின் மகன் அஸ்வினுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சவுந்தர்யா- அஸ்வின் திருமணம் இன்று காலை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை மண்டபத்தில் நடந்தது.
காலை 6 மணிக்கு திருமண நிகழ்ச்சி தொடங்கியது. மணமக்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். சவுந்தர்யா அரக்கு கலரில் பட்டு புடவையும் பச்சை நிற ஜாக்கெட்டும் அணிந்து இருந்தார். மணமகன் அஸ்வின் வேட்டி அங்கவஸ்திரம் அணிந்து இருந்தார்.
மண மேடையில் அக்னி வளர்த்து புரோகிதர்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அதன் அருகில் உள்ள இருக்கையில் ரஜினி அமர்ந்து இருந்தார். தனது மடியில் சவுந்தர்யாவை உட்கார வைத்து இருந்தார். சரியாக 8 மணிக்கு மண மகள் சவுந்தர்யா கழுத்தில் அஸ்வின் தாலி கட்டினார். அப்போது மங்கள வாத்தியங்கள் முழங்கின.

Leave a Reply