அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் வருடாந்த பெருநாளை முன்னிட்டு-ஆலயத்தினை புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஆலய பாதுகாவலரும்,ஆலய நிர்வாக நீண்டகால உறுப்பினருமாகிய,பெரியவர் திரு அல்பிரட் ஜோட்ஸ் அவர்களின் நேரடி மேற்பார்வையில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது.
ஆலய புனரமைப்புக்கு மேலதிக நிதி தேவைப்படுவதனால்,புலம் பெயர்ந்து வாழும் அன்னையின் பக்தர்களிடம் அல்லையூர் இணையத்தின் ஊடாக தெரியப்படுத்துமாறு -தனது கைப்பட எழுதிய வேண்டுகோளினை அனுப்பி வைத்துள்ளார்-பெரியவர் திரு அல்பிரட் ஜோட்ஸ் அவர்கள்-எனவே அல்லைப்பிட்டி புனித கார்மேல் அன்னையின் புனரமைப்புக்கு உதவிட விரைந்து வருவீர்கள் என நம்புகின்றோம்.வரும் 07.07.2015 செவ்வாய்க்கிழமை அன்று ஆலய வருடாந்த திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துத் தொடர்புகளுக்கும்….
திரு பொன்னத்துரை ஸ்ரனிலாஸ்-பிரான்ஸ்
தொலைபேசி இலக்கம்…0033651950313