அல்லைப்பிட்டியில் கோவில் கொண்டு அருள்பாலிக்கும் கொக்குழாப்பதி மூன்றுமுடி கருமாரி அம்மனின் ஆனி உத்தரத்திருவிழா 23-06-2015 புதன்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அல்லைப்பிட்டியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பெருமளவான மக்கள் ஆனி உத்தரத் திருவிழாவில் பக்தியோடு கலந்து கொண்டதாகவும்-கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாது அதிகளவான மக்கள் கலந்து கொண்டது பெரும் சந்தோசத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்று பக்தர் ஒருவர் எமது இணையத்திற்குத் தெரிவித்தார்.
ஆனி உத்தரத்திருவிழாவினை கடந்த பல வருடங்களாக-அல்லைப்பிட்டியைச் சேர்ந்த,அமரர்கள் திரு திருமதி ஆறுமுகம்-அகிலாண்டம் தம்பதிகளின் புதல்வி திருமதி தெய்வேந்திரா ஜெயராணி (பிரித்தானியா) அவர்களின் அனுசரணையிலேயே நடந்து வருவதாக மேலும் தெரிய வருகின்றது.