யாழ் தீவகத்தில் பிரசித்தி பெற்ற-வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தினை-முழுமையாக புனரமைக்கும் பணிகள் கடந்த வருடம் 28.08.2014 அன்று தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பல கோடி ரூபாக்கள் மதிப்பிடப்பட்டு-ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்புனரமைப்புப் பணிகளுக்கான நிதியினை-உள்ளூரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தகப் பெருமக்கள் என பலரும் வழங்கி வருவதுடன்-
மேலும் புலம்பெயர்ந்து உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வரும் வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மனின் பக்தர்கள் அனைவரும் ஒன்றினந்து தாம் வசிக்கும் நாடுகளில் நிதியினைத் திரட்டி வழங்கி வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முத்துமாரி அம்மனின் திருப்பணிக்கு மேலும் பங்களிப்பினைச் செய்ய விரும்புவோர் கீழ் வரும் வங்கிக் கணக்கு இலக்கத்திற்கு பணத்தினை அனுப்பி வைக்குமாறு அறியத் தரப்பட்டுள்ளது.
COMMERCIAL BANK-வேலணைக் கிளை
சேமிப்பு கணக்கு இலக்கம்-8170902640
நடைமுறைக் கணக்கு இலக்கம்-1170902640