கனடா வாழ் புலம்பெயர் உறவுகளான கனடா மொன்றியல் பகுதியில் வசிக்கும் ஜெயம் ஜெனா, ராஜ் ஆகியோர் கடந்த 13ம் திகதி கிளிநொச்சி பளையில் விவசாயம் கல்வி போன்ற முயற்சிகளுக்காக நீரிறைக்கும் மோட்டார் இயந்திரம் மற்றும் வறிய மாணவர்களுக்கான கல்வி நிதியுதவி என்பவற்றை வழங்கியுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர் கோகுலச்செல்வி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் வேழமாலிகிதன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த வாழ்வாதார உதவிகள் பளையைச் சேர்ந்த இரத்தினம் கறுப்பையா -கனகசீலன் நிர்மலா சேனாதிராசா தெய்வானைப்பிள்ளை செல்லையா செல்வேஸ்வரி ஆகியோருக்கும் கல்வியுதவிகள் ரவீந்திரன் பிரியங்கன் கந்தையா ஜெயசீலன் கனகசிங்கம் நிசாந்தன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.
இதேவேளை கடந்த ஏப்பிரல் மாதம் ஜெயம் ஜெனா ராஜ் மற்றும் அவுஸ்திரேலியா மெர்ல்பேன் உறவு பேபிராஜ் ஆகியோரால் ஒரு தொகுதி மோட்டார் இயந்திரங்கள் வழங்கிவைக்கப்பட்டன.இந்த உதவிகள் பளையை சேரந்த செ.மகேஸ்வரி கோ.ஜெயலலிதா வீ.கோகுலசாந்தி சு.பூலோகசுந்தரி த.சசிகலா அ.செல்வதி சு.தயாளினி கருணசேகரம் நா.பரமேஸ்வரி ஆகியோருக்கு கிடைக்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
எமது உறவுகளான கனடாவில் வாழும் ஜெயம் ஜெனா மற்றும் ராஜ் போன்றவர்கள் மிகுந்த கருணையுள்ளம் படைத்தவர்கள்.
அவர்கள் பசிக்கின்றவனுக்கு மீனை கொடுப்பதைவிட தூண்டிலை கொடுப்பது போன்ற தூரநோக்கான பெறுமதியான உதவிகளை செய்துவருகின்றவர்கள் கடந்த மாதங்களிலும் இங்கு அவர்கள் வந்து நின்றபோது பளைபகுதியில் ஜெயம் ஜெனா ராஜ் ஆகியோர் ஒரு தொகுதி பயனாளிகளுக்கு நீரிறைக்கும் மோட்டர்கள் துவிச்சக்கரவண்டிகள் என்பவற்றை வழங்கியிருந்தனர்.
இங்கு நேரில் வந்து பார்த்து மக்களோடு கலந்துரையாடி பாதிக்கப்பட்ட மக்களுக்கான தேவைகளை உணர்ந்து இந்த உதவிகளை தொடர்ந்து செய்துவருகின்றார்கள் அவர்களுக்கு எமது மக்கள் சார்பில் மிகுந்த நன்றிகள்.