கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலய திறப்பு விழாவில்……
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பு உரையாற்றினார்.
அன்னைசாரதா புதிய கட்டிட திறப்புவிழாவில் மேலும் வடமாகாண சபையின் உறுப்பினர்களான-திரு சு.பசுபதிப்பிள்ளை திரு ப.அரியரத்தினம் கரைச்சி பிரதேசசபை தவிசாளர் நாவை.குகராசா ஓய்வுநிலை அதிபர் இராஜேந்திரம் அயல்பாடசாலைகளான பாரதிபுரம் மகா வித்தியாலயம், திருவள்ளுவர் வித்தியாலயம் ,இராமகிருஸ்ணா வித்தியாலயம், செல்வநகர் அ.த.க.பாடசாலை ,கனகபுரம் மகா வித்தியாலயம், கிளிநொச்சி மத்திய மகா வித்தியாயாலயம் ,ஆகியவற்றின் அதிபர்கள் பிரதிஅதிபர்கள் மற்றும் கிளிநொச்சி கல்வி வலயத்தின் தொழில்நுட்ப அதிகாரி வேல்குமரன் கிராம சேவகர் சந்திரபாலன் ஓய்வுநிலை கிராமசேவகர் வைரவநாதன் தமிழரசுக்கட்சியில் மத்திய குழு உறுப்பினர் ஜெயக்குமார் பா.உறுப்பினர் சி.சிறிதரன்- செயலாளர் பொன்.காந்தன் அன்னை சாரதா வித்தியாலய அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் -பழைய மாணவர்கள் -பெற்றார்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.