வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவின் இறுதிநாள் நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

வவுனியா ரம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு நிறைவின் இறுதிநாள் நிகழ்வு-விபரங்கள் இணைப்பு!

s (2) (2)

வவுனியா ரம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா எதிர்வரும் யூன் மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை பி.ப 4.00 மணிக்கு  வவுனியா இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் அருட்சகோதரி திரோசம்மா சில்வா தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், சிறப்பு விருந்தினராக அருட்சகோதரி ஏ.விக்ரர் சூசை, அருட்சகோதரி கிறிஸ்ரா மரியதாஸ், கௌரவ விருந்தினராக தபால் அதிபர் பி.றோகண அபயரத்ன சிறப்பிக்கவுள்ளனர். பாடசாலை அதிபர், பாடசாலை மாணவர்கள். பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர்கள், பாடசாலை நலன்விரும்பிகளினால் இவ் வைபவம் சிறப்புற இடம்பெறவுள்ளது.
இவ் வைபவத்திற்கு பிரதமவிருந்தினராக வடமாகாணபிரதமசெயலாளர் ஏ.பத்திநாதன் சிறப்புவிருந்தினராக அருட்சகோதரி கிறஸ்ரா மரியதாஸ் கௌரவவிருந்தினராக தபால்அதிபர் பி.றோகணஅபயரத்ன ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
பாடசாலை அதிபர் பாடசாலை மாணவர்கள் பாடசாலை அபிவிருத்திசங்கத்தினர் பழையமாவர்கள் பாடசாலை நலன்விரும்பிகள் உட்பட பலரின் ஒழுங்கமைப்பில்இவ்விழா இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளும் வண்ணம் பாடசாலை சமூகம் அன்புடன் அழைக்கின்றது

இப்பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி திரேசம்மாசில்வா அவர்களின் தலைமையில் முகாமைத்துவ குழு -பாடசாலை அபிவிருத்தி குழு -பழைய மாணவர் சங்கம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடனேயே  இவ்விழா கொண்டாடப்படவுள்ளது. அதனை ஒட்டிய 125வது ஆண்டிற்குரிய சிறப்பம்சமாகிய மலர் வெளியீடும் நடைபெற இருப்பதால். இப்பாடசாலையுடன் தொடர்புடையவர்களிடம் இருந்து ஆக்கங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. (ஆக்கங்கள் தரவிரும்புவோர் சித்திரைமாதம் 20ம் திகதி முன்னதாக)

s (3) (1) s (1) s (1) (1)

Leave a Reply