தீவகம் மண்கும்பான் செட்டிகாட்டுப் பகுதியில் அமைந்துள்ள வைரவர் கோவிலின் வருடாந்த பொங்கல் மற்றும் வேள்வித் விழா-13-06-2015 சனிக்கிழமை அன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
தீவகத்தில் மிக நீண்ட காலமாகவும் – பக்திபூர்வமாகவும்- நடைபெற்று வருகின்ற வேள்வித் திருவிழாக்களில் ஒன்றாகவே -மண்கும்பான் செட்டிகாட்டு வைரவர் ஆலய வேள்வித் திருவிழாவும் நோக்கப்படுகின்றது.
சனிக்கிழமை அன்று நடைபெற்ற-வேள்வியிலும் வழமைபோல் ஆடு,கோழிகள் பலியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இம்முறை அல்லையூர் இணையத்தில் பதிவு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில்-எமக்கு கிடைத்த சில நிழற்படங்களை உங்கள் பார்வைக்கு கீழே இணைத்துள்ளோம்.