தீவகம் மண்கும்பான் முருகனுக்கு இவ்வருடத்திலிருந்து பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

தீவகம் மண்கும்பான் முருகனுக்கு இவ்வருடத்திலிருந்து பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா-விபரங்கள் படங்கள் இணைப்பு!

IMG_8232 copy

யாழ் தீவகம் மண்கும்பானில் அமைந்துள்ள மிகப்பழமையான  முருகன் ஆலயத்தினை புனரமைத்து பத்துநாட்கள் அலங்காரத் திருவிழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த கால யுத்த அனர்த்தங்களினால் மண்கும்பானிலிருந்து வெளியேறிய மக்களில் பலர் மீண்டும் ஊர் திரும்பியதனைத் தொடர்ந்து -புதர்மண்டிக்கிடந்த இவ்வாலயம்-பொதுமக்களினால் அண்மையில் சிரமதானமூலம் துப்பரவு செய்யப்பட்டுள்ளதுடன்  மேலும் அலங்காரத் திருவிழாவினை சிறப்பாக நடத்துவதற்கான ஆயத்தங்களிலும் பொதுமக்கள் ஈடுபட்டு  வருவதாக மேலும் தெரிய வருகின்றது.

இவ்வாலயத்தினை முழுமையாக புனரமைப்பதற்கும்-வரும் ஆவணி மாதத்தில் பத்துநாட்கள் நடைபெறவுள்ள அலங்காரத்திருவிழாவினை சிறப்பாக நடத்தி முடிப்பதற்கும் தேவையான நிதியினை வழங்க முருக பக்தர்கள் விரைந்து முன்வருமாறு  அல்லையூர் இணையத்தின் ஊடாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துத் தொடர்புகளுக்கும்

மண்கும்பான் முருகன் ஆலய நிர்வாக சபை

தொலைபேசி இலக்கம்-……0094777362106

தகவல்….

திரு ஜெகதீஸ்வரன்( ஈசன்) லண்டன்

சிறு துளி பெரு வெள்ளம்

இதை உணர்ந்து விரைந்து உதவிடுவீர்…

IMG_8234 copy IMG_8235 copy IMG_8230 copy IMG_8236 copy IMG_8237 copy IMG_8238 copy IMG_8240 copy IMG_8241 copy IMG_8243 copy IMG_8245 copy IMG_8249 copy IMG_8247 copy (1) IMG_8251 copy IMG_8252 copy IMG_8254 copy IMG_8255 copy IMG_8256 copy

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux