தீவகம் வேலணை பிரதேச செயலகத்தின் நிர்வாக எல்லைக்குட்பட்ட-சகல கிராமசேவையாளர்களின் பிரிவில் இயங்கும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான அவசர கலந்துரையாடல் ஒன்றினை-வேலணை பிரதேச செயலர் திருமதி மஞ்சுளாதேவி சதீஸ்சன் அவர்கள் கடந்த 03.06.2015 புதன்கிழமை அன்று காலை 11 மணிக்கு வேலணை பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடத்தினார்.
இக்கலந்துரையாடலில் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாகப்பேசப்பட்டதுடன்- கீழ் வரும் முக்கிய விடயங்கள் பிரதேச செயலர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளினால் கலந்துரையாடப்பட்டு-பொதுமக்களின் கவனத்திற்கு முன் வைக்கப்பட்டுள்ளன.
அவையாவன…
01-தீவக கிராமங்களில் மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக காணப்படும் பற்றைகள் யாவும் வெட்டி அகற்றி துப்பரவு செய்யப்படவேண்டும்.
02-இப்பற்றைகளை வெட்டி அகற்ற-அப்பகுதி மக்களும்-பொது அமைப்புக்களும் முன் வரவேண்டும்.
03-வெளிநாடுகளிலும்,தீவகத்திற்கு வெளியிலும் வசிக்கும் காணி உரிமையாளர்கள் தங்கள் காணிகளில் காணப்படும் பற்றைகளை வெட்டி துப்பரவு செய்ய முன் வரவேண்டும்.
04-மண்கும்பான்-அல்லைப்பிட்டி-வேலணைப் பகுதிகளில் சட்டவிரோத மண் அகழ்வு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளதனால்-மீறி மண் அகழ்வில் ஈடுபடுவோரை-பொதுமக்களோ அல்லது பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகளோ காணும் பட்சத்தில் 0774949933 இந்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்க வேண்டும்.
05-தீவகத்தில் அதிகரித்துள்ள சட்டவிரோத மதுபான விற்பனையினை தடுப்பதற்கும் பொதுமக்கள் ஒத்துளைப்பு வழங்க முன் வரவேண்டும்.
06-அல்லைப்பிட்டியின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள வயல் நிலங்களில் Maga நிறுவனத்தினால் கடந்த வருடம் கொட்டப்பட்ட கடல் மணலினை அகற்ற உடனடி நடைவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
07-சிறுவர்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பில் அனைவரும் கூடிய கவனம் செலுத்த முன் வரவேண்டும்.