யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற- நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்-விபரங்கள் இணைப்பு!

யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற- நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவம் தொடர்பான கலந்துரையாடல்-விபரங்கள் இணைப்பு!

இம்மாதம் 17ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவத்திற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த 8 ஆம் திகதி. இடம்பெற்றது.    

யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன்  அவர்கள் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக துறைசார் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.                     

திருவிழாவில் பங்கேற்க வருகை தரவுள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு,சுகாதாரம்,குடிநீர்,பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து தொடர்பாக இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.                  பொதுமக்களின் பாதுகாப்பிற்கென நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் இக்கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.                 

மஹோற்சவ காலத்தில் அதிகாலை 4.30 மணிமுதல் யாழ். பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கி தனியார் மற்றும்  இ.போ.ச பேருந்து சேவைகளும்  அதிகாலை 6 மணிமுதல் குறிகட்டுவானிலிருந்து நயினாதீவிற்கு  படகு சேவைகளும் இடம்பெறும் என தீர்மானிக்கப்பட்டது.  

பேருந்து கட்டணமாக ரூபா.72 அறவிடப்படும் என்று இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது. உணவுப்பொருட்கள் மற்றும் ஐஸ்கிறீம் விற்பனையாளர்கள் உரிய அனுமதிகளை பெற்ற பின்னரே கோவில் வளாகத்தில் தமது வியாபாரங்களை மேற்கொள்ள முடியும் என்பதுடன்  பச்சை குத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு இவ்வருடமும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் இக்கலந்துரையாடலின் போது தெரிவித்தனர்.   மேலும் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி  செய்வதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினரின் பங்களிப்பு இருக்குமென கடற்படை அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டது.  

பக்தர்கள் எவ்வித சிரமங்களுமின்றி திருவிழா காலங்களில் ஆலயத்திற்கு சென்று வருவதற்கான சகல ஏற்பாடுகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அரசாங்க அதிபர் இதன்போது  தெரிவித்தார். 

DSC02583

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux