இலங்கையின் வட பகுதியில்  தொடரும் சமூகச் சீர்கேடுகளினால் மக்கள் பெருவேதனை…

இலங்கையின் வட பகுதியில் தொடரும் சமூகச் சீர்கேடுகளினால் மக்கள் பெருவேதனை…

யாழ். குடாநாட்டில் அதிகரித்து வருகின்ற சமூக சீர்கேடு கள் தொடர்பாக ஊடகங்களில் தினமும் செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. பாலியல் ரீதியான வன் முறைகள், கொலைகள். கொள்ளைகள், கோஷ்டி மோதல்கள். போதை வஸ்துப் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம் என்றெல் லாம் அன்றாடம் செய்திகள் வெளிவருகின்றன.

கல்வியிலும் சுய உழைப்பிலும் முன்னொரு காலத்தில் போற்றிப் புகழப்பட்ட யாழ். சமூகத்தில் தற்போது உருவாகியுள்ள கலாசாரப் பிறழ்ச்சி கற்றோர் சமூகத்துக்கு தலைக்குனிவையும் வேதனை யையும் ஏற்படுத்தியுள்ளது.

யாழ்குடாநாட்டில் இடம்பெறுகின்ற சீரழிவுகள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்துக்குமே வெட்கக்கேடானதாகும்.

வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்னேஸ்வரன் இது குறித்து சமீ பத்தில் பெரும் வேதனையை வெளியிட்டிருந்தார். வட மாகாண தமிழ் சமூகத்தை ஒட்டுமொத்தமாக சீரழிவுக்குள் தள்ளி விடு வதற்காக திட்டமிட்ட முறையில் இது போன்ற செயல்களுக்கு தூண்டுதல் அழிக்கப்படுகின்றதோ என்ற சந்தேகத்தையும் விக் னேஸ்வரன் வெளியிட்டிருந்தார்.

புங்குடுதீவு மாணவி வித்யாவுக்கு நடந்த கதி காட்டுமிரண்டித் தனத்தின் உச்ச கட்டமாகும். இச் சம்பவத்தின் தாக்கம் சர்வதேச ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும் இன்னுமே அங்கு சீர்கேடுகள் ஓயவில்லை. போதைப்பொருள் பாவனை யாழ் குடாநாட்டுக்குள் தாராளமாக ஊடுருவியிருப்பதை அறிய முடிகிறது. இளவயதினர் பலர் போதைவஸ்துக்கு அடிமையான நிலையில் மோசமான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன.

யுத்தத்துக்குப் பின்னரான சூழ்நிலையே யாழ்குடாநாட்டில் மோச மான கலாசார சீரழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாக உளவியலாளர் கள் கூறுகின்றனர். அப்பிரதேசத்தில் எதிர்காலத்தில் சீர்கேடான தலைமுறையொன்று உருவாகுவதற்கான அறிகுறிகள் நன்கு தென் படுகின்றன.

வடக்கின் இன்றைய நிலைமையை ஆரோக்கியமான அறிகுறியாகக் கொள்ள முடியாது. அப்பாவி மக்கள் நிம்மதியாக வாழ முடியாத வகையிலேயே அங்கு அன்றாடம் சம்பவங்கள் தொடருகின்றன.

பணத்துக்காக எவரையுமே கொலைசெய்யக்கூடிய கொந்தராத்துக் கும்பலொன்று யாழ். குடாநாட்டில் இயங்கி வருவதாக அறிய முடிகிறது, தனிப்பட்ட பகைமைக்காக எதிரிகளை பழி தீர்க்க விரும்புவோர் இவ்வாறான கூலிப் படையினரின் உதவியை நாடுவதாகத் தெரியவருகிறது. கொந்தராத்துக் குழுக்களுக்கும் அங்கு இடம்பெறுகின்ற வன்முறைச் சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளது உண்மை.

இதேசமயம் யாழ். பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற வன்முறைக் குழுக்கள் உள்ளதாக மக்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சீர் கேடான சம்பவங்கள் தமிழ் சமூகத்துக்கு தலைக்குனிவை ஏற் படுத்துவது ஒருபுறமிருக்க, அரசாங்கத்தின் நற்பெயருக்கும் களங் கத்தை ஏற்படுத்தக் கூடும்.

யாழ். குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸார் மிகவும் அசமந்தமாக உள்ளனரென்ற அபிப்பிராயத்தையும் ஏற்படுத்து வதற்கு இடமுண்டு. ஏனெனில் வித்யா படுகொலைச் சம்பவத் தைத் தவிர்ந்த ஏனைய பெருமளவான சம்பவங்கள் தொடர்பான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் பொலிஸாரின் செயற்பாடு அசமந்தமாக இருப்பதையே காண முடிகிறது.

நாட்டில் இளைய சமுதாயத்தைச் சீர்குலைப்பதில் போதைப் பொருள் முக்கிய பங்கு வகிக்கிறது. முன்னரெல்லாம் போதைவஸ்துப் பாவனை, போதைவஸ்துக் கடத்தல் என்பன வடபகுதியில் குறிப் பிடும்படியாக இருந்ததில்லை.

இன்றைய நிலையில் இந்தியாவிலிருந்து போதைப் பொருளைக் கடத்துவதற்கான கேந்திர மையமாக வட பகுதி உள்ளதாகத் தெரிகிறது. போதைப் பொருள் மாத்திரமன்றி இந்தியாவிலிருந்து கேரளாக் கஞ்சா கடத்தி வரப்படும் சம்பவங்களும் அடிக்கடி இடம்பெறுகின்றன.

போதைப் பொருளும் கஞ்சாவும் யாழ். குடாநாட்டுப் பாவனைக்காகக் கடத்தி வரப்படுகின்றனவா அல்லது நாட்டின் ஏனைய பிரதேசங்களுக்கு அனுப்பப்படுவதற்காகக் கொண்டு வரப்படு கின்றனரா என்பதெல்லாம் தெளிவாகத் தெரியவில்லை.

எவ்வாறிருந்த போதிலும் போதைப் பொருள் கடத்தலுக்கான கேந்திர மையமாக யாழ்குடாநாடு விளங்குவது அதிர்ச்சி தருகிறது. இக்குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதில் பொலிசாரும் கடற் படையினரும் எத்தகைய துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்களென்பது தெரியவில்லை.

ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு வடக்கு, கிழக்கு முற்றாக மீட்கப்பட்ட பின்னர் யாழ். குடாநாட்டில் அமைதிச் சூழ்நிலை நிலவுமென்றே எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஆயுதப் போராட்டத்தைப் போன்ற மற்றொரு கொடிய சூழ்நிலை வடபகுதியில் தற்போது ஏற்பட்டுள்ளது. அமைதியை விரும்புகின்ற மக்கள் அச்சத்துடனேயே வாழக்கூடிய சூழல்தான் அங்கு இப்போது நிலவுகிறது.

வடக்கில் இடம்பெறுகின்ற சமூகச் சீர்கேடுகளை ஒழிப்பதில் பொலி சார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார்களா?

இவ்வாறான வினாவொன்று அங்குள்ள மக்கள் மத்தியில் எழா மலில்லை இவ்வினாவுக்கு சாதகமாக பதிலளிக்கும் வகையில் பொலிசார் தீவிரமான நடவடிக்கை மேற்கொள்ளத் தவறுவார் களானால் மக்கள் மத்தியில் சந்தேகமும் தொடர்ந்து கொண் டேயிருக்கும். பொலிசார் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விடும் வகையில் நடவடிக்கைகள் அமைந்துவிடக் கூடாது.

SAM_0093

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux