காங்கிரஸ் தலைமையில் புதிய கூட்டணி: திருமாவளவன்

கடலூர்:கடலூரில் நடந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதுவை, கடலூர் மண்டல சிறப்பு செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, வர இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் 3 வது அணி போட்டியிட வாய்ப்பு உள்ளதா’ என்ற கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர்:

எத்தனை அணிகள் வேண்டுமானாலும் உருவாகலாம். ஆனால் உண்மையான போட்டி தி.மு.க. அணிக்கும் அ.தி.மு.க. அணிக்கும்தான். தி.மு.க. கூட்டணி வலுவாக உள்ளது. ஆனாலும் தி.மு.க. அரசை மைனாரிட்டி அரசு என்று சிலர் குறிப்பிடுவதால், தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேர்தலில் தனிப் பெரும்பான்மை வெற்றியைப் பெறவே விரும்புகின்றன. அதற்கான முயற்சியில் அக்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன. இந்தச் சூழ்நிலையில் காங்கிரஸ் மற்றும் சிறுசிறு கட்சிகள், தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தும் முயற்சியும் உருவாக்கப்பட்டு வருகிறது என்றார்.

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux