யாழ் தீவகம் வேலணையில் பிறந்த,யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு…

யாழ் தீவகம் வேலணையில் பிறந்த,யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு…

யாழ் தீவகம் வேலணை கிழக்கு செல்வநாயகம் வீதியைச் சேர்ந்த,திரு திருமதி மாணிக்கவாசகர்-சிவபாக்கியம் தம்பதிகளின் இரண்டாவது புதல்வரே யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மாணிக்கவாசகர்  இளஞ்செழியன் ஆவார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியை,வேலணை கிழக்கு மகாவித்தியாலயத்திலும்-பின்னர் யாழ் பரியோவான் கல்லூரியிலும் கற்றவராவார்.இவரது தந்தையான  திரு மாணிக்கவாசகர் (ஓய்வுநிலை ஆசிரியர்)அவர்கள் பிரபல்யமான சமூக சேவையாளராவார்.இவரது தாயார் ஓய்வுநிலை அதிபராவார்.

இவரது சகோதரன் திரு மா.இளந்திரையன் அவர்கள்-சுவிடன் நாட்டில் சிறந்த மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றி வருகின்றார்.ஓய்வுநிலை ஆசிரியையான,இவரது சகோதரி சிவகைளரி அவர்கள் கனடா நாட்டில் வசித்து வருகின்றார்.

இவரது மூன்றாவது சகோதரர் திரு மா.இளம்பிறையன் அவர்கள்-யாழ் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி விஞ்ஞான விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார்.

இவரது இளைய சகோதரர் திரு மா.இளங்குமரன் அவர்கள்-கனடாவில் சர்வதேச வானொலி நிறுவனத்தில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தனை சிறப்புக்களை பின்னணியாகக் கொண்ட-குடும்பத்திலிருந்து நீதிமானாக வலம் வரும் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் நல் நீதியை வழங்குவார் என்ற நம்பிக்கையோடு -தீவக மக்கள் சார்பில் வாழ்த்தி வரவேற்கின்றோம்.

11245306_385209184998150_174837735_n11325563_385209111664824_1685200028_n

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux