உலகத்தை உலுக்கிய புங்குடுதீவு மகா வித்தியாலய மாணவி வித்தியாவின் படுகொலையினைத் தொடர்ந்து -தீவகத்தின் பல வீதிகள் பொது அமைப்புக்களினால் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக கடந்த ஞாயிறன்று வேலணை சிற்பனைப்பகுதியிலிருந்து -வேலணை மத்திய கல்லூரிக்குச் செல்லும் பிரதான வீதி-இப்பகுதியில் இயங்கிவரும் ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முழுமையாக துப்பரவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதே போல் தீவகத்தின் இதர பகுதிகளிலும்-வீதிகளின் இருமருங்கிலும் அடர்ந்து காணப்படும் பற்றைகளை வெட்டி அகற்றி மாணவர்கள் பயமின்றி பாடசாலைக்கு சென்று வர உதவிட சம்மந்தப்பட்டவர்கள் முன்வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.