அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள புனித பிலிப்புநேரியார் ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா 17-05-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நடைபெற்று .26-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று பெருநாள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.
அல்லையூர் இணையத்தினால் வீடியோ மற்றும் நிழற்படங்கள் பதிவு செய்யப்பட்டதுடன்-மேலும் தாகசாந்தி நிலையம் அமைக்கப்பட்டு-புனித பிலிப்பு நேலியார் பக்தர்களுக்கு நிறைவான தாகசாந்தியும் வழங்கப்பட்டது.
நிதி அனுசரணை வழங்கியவர்கள்
வீடியோ-நிழற்படங்களுக்கான அனுசரணையினை–
திரு அருளானந்தம் ஆனந்தராஜா (ஆனந்தன்)அல்லைப்பிட்டி-இத்தாலி-அவர்கள் வழங்கியிருந்தார்.
தாகசாந்தி நிலையத்திற்கான அனுசரணையினை-
திரு தேவநாயகம் அருமைநாயகம்-பிரான்ஸ்
திருமதி டேவிட் அனிற்றா-பிரான்ஸ்
திரு தேவநாயகம் ஞானம்-பிரான்ஸ்-ஆகியோர் வழங்கியிருந்தனர்.
இவர்கள் அனைவருக்கும் அல்லையூர் இணையத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
வீடியோப் பதிவு பின்னர் இணைக்கப்படும்.
படங்களில் அழுத்திப் பெரிதாக்கிப் பார்வையிடுங்கள்!