தீவகம் வேலணை பள்ளம்புலம் மக்களினால் சிரமதானமூலம் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் வேலணை பள்ளம்புலம் மக்களினால் சிரமதானமூலம் வெட்டி அகற்றப்படும் பற்றைகள்-படங்கள் விபரங்கள் இணைப்பு!

தீவகம் சரவணை கிழக்கு வேலணை பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தின் செயற்பாட்டுக்குழுவினால்,மயிலம்புலம் வீதியின் இருமருங்கும் அடர்ந்து காணப்பட்ட பற்றைகளை-பொதுமக்கள் ஒன்றிணைந்து 24-.05.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று சிரமதானம் மூலம் வெட்டி அகற்றினர்.

இப்பாதையானது வீதி அபிவிருத்தி திணைக்கழகத்தின் ஆழுகைக்குட்பட்டதாகவும்-முன்னைய காலங்களில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகள் இப்பாதையினால் காலையும்,மாலையும் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இப்பாதையானது தற்போது மிகவும் மோசமாக பாதிப்படைந்திருப்பதாகவும்-இப்பாதையின் இரு மருங்கிலும் அடர்ந்து வளர்ந்த பற்றைகள் காணப்படுவதாகவும்-இப்பற்றைகளை சிரமதானமூலம் வெட்டி அகற்றுவதற்கு முடிவெடுக்கப்பட்டு-கடந்த ஞாயிறு அன்று 50பேர் வரை கலந்து கொண்டு இப்பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்சிரமதானப்பணியில் ஈடுபட்டவர்களுக்கு,காலையும்,மதியமும் பள்ளம்புலம் முருகமூர்த்தி சனசமூக நிலையத்தினரால் உணவு வழங்கப்பட்டதுடன் -இறுதியில் 500 ரூபாக்கள் பெறுமதியான உலர்உணவுப் பொதிகள் அனைவருக்கும்  வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது.

இச்சிரமதானத்திற்குத் தேவையான நிதி அனுசரணையினை-திரு கைலாயபிள்ளை திருநீலகண்டன் அவர்கள் வழங்கியுள்ளார்-என்றும் சிரமதானப்பணியினை ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு அருணகிரிநாதன் அவர்கள் தலைமையேற்று நடத்தி முடித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இச் சனசமூக நிலையத்தினால்-இப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

2 (1) a (1) (2) a (2) (2) a (3) (1) a (6) (1) a (4) (1) a (6) (1) a (7) (1) a (11) a (13)a (12)a (8) (1) a (5) (1) a (10) (1)

Leave a Reply

WordPress Appliance - Powered by TurnKey Linux