லண்டனில் துண்டான இளைஞரின் தலையை ஒட்ட வைத்து இந்திய டாக்டர் மருத்துவ சாதனை!

லண்டனில் துண்டான இளைஞரின் தலையை ஒட்ட வைத்து இந்திய டாக்டர் மருத்துவ சாதனை!

பிரிட்டனில், கார் விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து, அவரை உயிர் பிழைக்கச் செய்துள்ளார், இந்திய டாக்டர் ஆனந்த் காமத்.

Tamil_News_large_1260409
விபத்து:பிரிட்டனின் நியூகேசில் நகரைச் சேர்ந்தவர், டோனி கோவான். கடந்தாண்டு செப்டம்பரில், காரில் வேகமாக சென்ற போது, டெலிபோன் கம்பத்தில் மோதி கழுத்தில் அடி
பட்டதில், முதுகு தண்டு வடத்திலிருந்து தலை தனியாக கழன்றுவிட்டது.எனினும், அவரின் மூளை செயல்பட்டுக் கொண்டிருந்தது. அந்த இளைஞர், டாக்டர் ஆனந்த் காமத்தின் மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார். ரத்தமும், சதையுமாக பிரிந்திருந்த தண்டுவடத்தையும், தலையையும் ஒன்றாக சேர்த்து, சிக்கலான அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார், டாக்டர் ஆனந்த்.

எட்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோவான், இன்னும் சில தினங்களில், பூரண நலம் பெற்று வீடு திரும்ப உள்ளார்.இது போன்ற பயங்கரமான விபத்துகளின் போது உயிர் பிழைப்பவர்கள், சில நிமிடங்களில் இறந்து விடுவது வழக்கம்.

பாராட்டு:

அத்தகைய மோசமான அறுவைச் சிகிச்சையை, இந்திய டாக்டர் ஆனந்த் காமத் வெற்றிகரமாக செய்துள்ளதால், அவருக்கு பாராட்டு மழை குவிகிறது.

Leave a Reply