அன்பான அண்ணாவே எங்கள் ஆருயிரில் கலந்தவரே
உறவுகளை நீ பிரிந்து உலகைவிட்டுச் சென்றுவிட்டாய்
நிலையற்ற வாழ்வென்று நீ நிலைநாட்டிச் சென்றாலும்
அலை அலையாய் உன் நினைவு எங்கள் அடி மனதை உலுக்குதய்யா
எப்போதும் எம்முடனே உரையாடி மகிழ்வாய்
இப்போது எங்கிருந்து என்ன நீயும் செய்கின்றாய்
ஒருமாதம் சென்றிடினும் ஒரு யுகம்தான் சென்றிடினும்
உனை மறக்க மாட்டோம் நாம் உருகி இங்கே கதறுகின்றோம்
அல்லைநகர் வீதியிலே நீ அடிக்கடி நடந்து சென்று
கண்ணனது குழந்தைகளை கட்டி நீ முத்தமிட்டாய்
இன்று அந்த வீதியெல்லாம் உனைத்தேடி வாடுதய்யா
கண்களுக்குள் உன் உருவம் கலங்கியழ வைக்குதய்யா
மறுபடியும் பிறந்து வந்து எம் மனக்கவலை போக்கிவிடு
உருகி அழும் எங்களுக்கு உண்மை நிலை உணர்த்திவிடு
இறைவனது திருவடியில் உன் ஆத்மா சாந்திபெற இறைஞ்சியே நிற்கின்றோம்.
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி
குடும்பத்தினர்-அல்லைப்பிட்டி
தகவல்-சகோதரன் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம்-சுவிஸ்
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை,19.05.2015 செவ்வாய்கிழமை அன்று யாழ் கீரிமலையிலும்-வீட்டுக்கிரித்தியம் 21.05.2015 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியிலும் நடைபெற்றது.அன்னரது சகோதரர் திரு கிஸ்ணபிள்ளை இராஜலிங்கம் அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.