உலகத் தமிழர்களை உறையவைத்துள்ள -புங்குடுதீவு மகாவித்தியாலய உயர்தர வகுப்பு மாணவி சிவலோகநாதன் வித்தியா அவர்கள் காட்டு மிராண்டிகளால் கொடுரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தும்- குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டணை வழங்கக்கோரியும், மாணவர்களின் எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கோரியும்,குற்றவாளிகளுக்கு சார்பாக சட்டத்தரணிகள் முன்னிலையாகக்கூடாது என்பதை வலியுறுத்தியும்- புதன்கிழமை காலை 10 மணியளவில் யாழ் ஊர்காவற்துறை வீதியை மறித்து அல்லைப்பிட்டி சந்தியில் கவனயீர்ப்பு போரட்டம் ஒன்றை நடத்தினர்.
இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அல்லைப்பிட்டி மக்கள் கலந்து கொண்டு தமது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தனர்.இதனைவிட மேலும் தீவகத்தின் மற்றைய இடங்களான,அனலைதீவு,நயினாதீவு, வேலணை,புங்குடுதீவு,மண்கும்பான் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த,மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தனர் என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.