இலங்கையின் வட பகுதியில்-என்றுமில்லாதவாறு வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும்-இவ்விபத்துக்களால் தினமும் பெறுமதியான மனித உயிர்கள் இழக்கப்பட்டு வருவதாகவும்-வீதி விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்தி விபத்துக்களை தடுக்க சம்மந்தப்பட்டவர்கள் முன் வர வேண்டும் என்று- மக்களும்,சமூக ஆர்வலர்களும் கவலையோடு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இன்று 17.05.2015 ஞாயிற்றுக்கிழமை கைதடியில் இருந்து யாழ் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியுடன் யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று நேர் எதிரே மோதி விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த திருகோணமலையைச் சேர்ந்த அன்ரனி யூட் பிரகாஸ் வயது 45 என்பவரே சம்பவ இடத்தில் இறந்தவராவார். மேலும் முச்சக்கர வண்டியில் மூவர் பயணித்திருந்ததுடன் ஏனையோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும், மழையின் காரணமாகவே இவ் விபத்து நேர்ந்ததாகவும் விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்திருப்பதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.